மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் திவ்யஷாலினி ஆகியோரின் மகன் தீக்சன். இவர் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் சர்வதேச கராத்தே வீரரும் தேசிய பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களிடம் தற்காப்பு கலை பயிற்சி பெற்று வருகிறார்.
அகில இந்திய அளவில் உள்ள சி பி எஸ் இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கராத்தே போட்டி, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 2025 நவம்பர் 15 முதல் 18 வரை நடைபெற்றது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 220 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள சி பி எஸ் இ பள்ளிகளில் இருந்து பங்குபெற்ற முதல் மற்றும் ஒரே மாணவன் என்ற பெருமையை மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர் தீக்சன் பெற்றார்.
தேசிய கராத்தே போட்டியில் பங்குபெற்று சிறப்பாக விளையாடிய தீக்சன் மற்றும் அவரது பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் ஆகியோரை அவர் கல்வி பயின்று வரும் டி எம் ஐ செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.





