தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேசுவரசாமி திருக்கோயில் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் அவர்கள், உதவி ஆணையர் ரவிசந்திரன் அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள் செயல் அலுவலர் திரு.முருகன் அவர்கள் உள்ளனர்.