தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.53,680க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.6,666-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.97.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.