நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுதினம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.