மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் இளையோர் திருவிழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கல்லுாரியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த இளையோர் தின விழாவை எம்எல்ஏ ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் இளை யோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத் தின் நேரு யுவகேந்திரா நாகை, மயிலாடு துறை, சிசிசி சமுதாயக்கல்லுாரி, தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல் லூரி ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவை மயிலாடுதுறையில் நடத் தியது. நேரு யுவகேந்திரா நாகை துணை இயக்குனர் திருநீலகண்டன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உத வியாளர் முத்துகணியன், துணை ஆய்வாளர் செங் குட்டுவன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மாவட்ட மகளிர் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர் தீபா ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.

மயிலாடுதுறை எம் எல்ஏ ராஜகுமார் குத்துவி ளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஏடி எம் கல்லுாரி பேராசிரியர் உமா மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் (பொ) முத்துக் குமாரசாமி, விழிகள் ராஜ் குமார், முத்தமிழ் ஆனந் தன், குழந்தைகள் பாதுகாப்புஅலகு நன்ன டத்தை அலுவலர் திருவா ரூர் வெங்கட்ராமன்,லயன் சங்க நிர்வாகிஅனிதா அரவிந்தன், தேர் வுக்குழு உறுப்பினர் அச் சுதன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஞானாம்பிகை கல்லுாரி உதவி பேராசிரி யர் ராஜேஷ் மற்றும் அலு வலர்கள், நேரு யுவகேந் திரா தன்னார்வலர்கள், ஏவிசி தருமபுரம் ஞானாம் பிகை அரசு மகளிர் கலைக் கல்லுாரி, தேசிய மேல்நி லைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள், பள்ளிஇ கல்லுாரி மாணவ மாண விகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிசிசி சமுதாயக்கல்லுாரி நிறுவ னர் காமேஷ் வரவேற்றார். நேரு யுவகேந்திரா அலு வலக திட்ட உதவியாளர் சுந்தர் நன்றி கூறினார்.

Play Video