‘டித்வா’ புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘டித்வா’ புயல் காரணமாகத் தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.





