(13.03.2025) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 37 மாவட்டங்களைச் சேர்ந்த 565 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கியதுடன், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தினையும், 2025-26 ஆம் ஆண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையினையும் மற்றும் 18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
பேசியதாவது.
அய்யன் திருவள்ளுவரின் 133 அடி திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி 31.12.2024 மற்றும் 01.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முக்கடல் சூழும் குமரி முனையில் வெள்ளி விழா, கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருக்குறளின் பெருமையினை கல்லூரி / பல்கலைக்கழக மாணாக்கர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் குறும்படங்கள். திரைச்சுருள்கள், எண்ணிம / செயற்கை நுண்ணறிவு (Digital and Artificial Intelligence) வாயிலாகத் திருக்குறளின் சிறப்பினை 2 (Oil paintings. Graphics, Reels, Arts) மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் பாராட்டுச் சான்று மறும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள 37 மாவட்டங்களில் வெற்றி பெற்ற 563 மாணாக்கர்களுக்கு, இந்தத் அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு அரங்கத்தில் பரிசுகளையும் சான்றிதழ்களையும் அளிப்பதில் நான் பெருமைக் கொள்கிறேன். பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதன்படி, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,500/-, இரண்டாம் பரிசாக ரூ.2,500/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1,500/- வழங்கப்படுகிறது.
அய்யன் திருவள்ளுவருக்குக் குறளோவியம் எழுதிச் சிறப்புச் செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். வள்ளுவர் கோட்டம் அமைத்து வரலாற்றில் திருவள்ளுவருக்கு அழியாத மாபெரும் அடையாளச் சின்னம் கண்டவர் அன்புத் தலைவர் நமது கலைஞர். இதன் சிகரமாகத்தான். 1999-இல் கன்னியாகுமரியில் 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலையைக் கலைஞர் அவர்கள் நிறுவினார்.
தமிழ்ப்புத்தாண்டினை தைத் திங்கள் முதல் நாளில் கொண்டாட ஆணையிட்டு தைப் பொங்கலுக்கு அடுத்த நாளினை திருவள்ளுவர் தினமாக நாம் பெருமிதத்தோடு கொண்டாடிட ஆணையிட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த அளவிற்கு திருவள்ளுவர் மீது மாறாத பற்று கொண்டவர் தலைவர் கலைஞர். தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு புதிய அமைச்சகமே கண்டவர் கலைஞர்.
அவர் வழியில் தளபதி அவர்கள் தமிழ்த்துறைக்கு தனியே அமைச்சரை நியமித்தார். உயிரைவிட மேலானது மொழி, மொழியின் மீதும் காதல் மொழிக்காகத் தனித்துறை தனிஅமைச்சர் கண்டது திராவிட மாடல் அரசு. அய்யன் திருவள்ளுவரை, மாணவர்கள் உள்ளங்களில் இந்த போட்டிகள் மூலம் பதிய வைத்துள்ளார் நமது முதல்வர்.
திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானர். திருவள்ளுவர். தமிழர்களுக்காக இருக்கக்கூடிய உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! திருவள்ளுவருக்கு சாயம் பூச நினைக்கிற தீயவர்களை விரட்டியடிக்க கடமைப்பட்டிருககின்றோம். புதுமைப்பெண், தமிழ்புதல்வன் மற்றும் நான் முதல்வன் என முத்தான திட்டங்களை உயர்கல்விக்குக்கு தந்து வரலாற்றில் சாதனைக்கு மேல் சாதனையாகப் படைத்துக் கொண்டிருக்கிறார் நமது தலைவர் தளபதியார்.
தொழில்நுட்பக் கல்வித் துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம்:-
தொழில்நுட்பக் கல்வித் துறையில் மேம்படுத்தப்பட்ட (https://dte.tn.gov.in) என்ற இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நவீன முயற்சியைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். மாணாக்கர்களுக்கும், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரும் எளிய வகையில் அணுகி துறையின் அனைத்து செயல்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு வசதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய இணையதளத்தில் பட்டயப் படிப்பு மாணாக்கர்களுக்கான இணையவழி சேவைகள் புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மாணாக்கர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு (Genuineness Verification), இடம்பெயர்தல் சான்றிதழ் (Migration Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Transcription) ஆகியவற்றினை அறிந்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
“மக்கள் பணியே முதல் பணி” எனச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர். அவர் வழியில், “அனைவருக்கும் அனைத்தும்” விரைந்து கிடைக்க உதவும் பல்வேறு “திராவிட மாடல் திட்டங்களில்” இந்த “மேம்படுத்தப்பட்ட இணையதளம்” வசதியும் ஒன்றாகும்.
காணொளி மூலம் கற்பித்தல், கற்றல் சேவை:-
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும் உதவிடும் வகையில், பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு காணொளி தொடர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும் மாணாக்கர்களுக்கு விளக்கப்படுகிறது. மேலும், இந்த காணொளி தொடரை Youtube “DOTE STREAMING”- https://www.youtube.com/@dotestreaming7912 என்ற இணையதலத்தில் பார்த்து திரிந்து பயன் பெறலாம்.
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை:-
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழுள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரிந்து எதிர்பாராமல் உயிரிழந்த அரசு ஊழியர்களின் 18 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை இன்று வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அரசு ஊழியர்களின் காவல் அரணாகக் கழக அரசு என்றும் நிற்கும் என்பதற்கு இது சாட்சி. புதுமைப்பெண், தமிழ்புதல்வன் மற்றும் நான் முதல்வன் என முத்தான திட்டங்களை உயர்கல்விக்குக்கு தந்து வரலாற்றில் சாதனைக்கு மேல் சாதனையாகப் படைத்துக் கொண்டிருக்கிறார் நமது தலைவர் தளபதியார்.
மாணாக்கர்களின் உள்ளங்களை மனம் கவர்ந்தவர் நம் முதல்வர் தளபதி அவர்கள். அயராது உழைக்கின்ற நமது துணை முதலமைச்சர் இளைஞர்களின் எழுச்சி நாயகன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடர்ந்து அறிவுத் திருவிழாக்கள், கருத்தரங்குகள், மாணாக்கர்களுக்குப் பல்வேறு போட்டிகள், முனைவர் பட்ட ஆய்வுக்கு மாண்புமிகு முதலமைச்சர் உதவித்தொகைத் திட்டம் எனத் “திராவிட மாடல்” அரசின் முன்னெடுப்புகளால், இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே உயர்கல்வியில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு இன்று உருப்பெற்றுள்ளது. உயர்கல்வியில் 28% அகில இந்திய அளவில் 48% தற்பொழுது பெற்று முதலிடம். உயர்கல்வியில் முன்பு முதலிடம் கேரளா இன்றோ தமிழ்நாடு, பெண்கல்வியில் முதலிடம், பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி ஆராய்ச்சிப் படிப்பில் தமிழ்நாடு முதலிடம் இதற்கெல்லாம் நமது மாண்புமிகு முதலமைச்சருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
மேலும், தேசியக் கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை என்ற பெயரில் 3,5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கும் மற்றும் இளங்கலை பட்டப்படிப்புக்கே நுழைவு தேர்வு மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்து கல்வியை ஒரு சாரார்க்கு மட்டுமே கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறது. இதனை நம் முதலமைச்சர் அவர்கள் முறியடிப்பார்கள்.
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி. விஜயகுமார், இ.ஆ.ப., (ஓய்வு) ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப.., வழிகாட்டுதல் குழு உறுப்பினர் முனைவர் எஸ். உஷா, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜெ. பிரகாஷ், தொழில்நுட்பக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் (பொ.). முனைவர் இ.எம். சீனிவாசன் மற்றும் உயர்கல்வித் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.