2024-2025 ஆம் ஆண்டின், நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும், 2025-2026 ஆம் ஆண்டின் மானியக் கோரிக்கையில் இடம்பெறவேண்டிய கொள்கைகள் தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

2024-2025 ஆம் ஆண்டின், நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும். 2025-2026 ஆம் ஆண்டின் மானியக் கோரிக்கையில் இடம்பெறவேண்டிய கொள்கைகள் தொடர்பாகவும்,  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் இன்று மதியம் (19.3.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

2024-2025 நிதியாண்டில் நெடுஞ்சாலைத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொன்றாக ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள், திட்டப் பணிகளை தரமாக உரிய காலத்தில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தினார்கள்.
கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், நபார்டு மற்றும் கிராமச் சாலைப் பணிகள், திட்டங்கள் அலகின் மூலம் மேற்கொள்ளும் பணிகள். சென்னை எல்லைச் சாலைத் திட்டப் பணிகள், சென்னை பெருநகர மேம்பாட்டுப் பணிகள் போன்ற திட்டப் பணிகளை தனிக் கவனம் செலுத்தி உரிய காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், வரும் நிதியாண்டின் 2025-2026க்குண்டான மானியக் கோரிக்கையில் இடம்பெற வேண்டிய கொள்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் இரா.செல்வர இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் தெ.பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப., முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.