தமிழ்நாட்டின் பல பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை வாய்ப்பு!

சென்னை வானிலை மையத்தின் கணிப்பின்படி, மே 6ஆம் தேதி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானதும் மிதமானதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, கோவை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.