தேசிய அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை மாணவர்கள் சாதனை:

பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கிட்டூர் ராணி சென்னம்மா உள்விளையாட்டு அரங்கில் 07.12.2025 அன்று நடைபெற்றது. இப் போட்டியில்  மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை  சார்ந்த  ஸ்ரீ நிரஞ்சன்  2 தங்கம், அருண்பிரியா 1 தங்கம் 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் மற்றும் தர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம்  என மொத்தம் 8 பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், தலைமை பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும் அகில கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் பார்கவ  ரெட்டி, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர் மோசஸ் பீட்டர்  உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

Advertisement