இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரில், தனது முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வினி குமார் அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், கொல்கத்தா அணி பேட்டிங்கிற்கும் இறங்கியது.
ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து திணறும் நிலையில், அங்க்கிரிஷ் ரகுவன்ஷி 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்றொரு பக்கம், அஸ்வினி குமார் தனது அதிரடி பந்துவீச்சால் கொல்கத்தா அணியை திகைக்க வைத்தார்.
அஸ்வினியின் இந்த அபார ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் அவர், தனது முதல் போட்டியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்! 🎯🔥