மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு சராமரி கத்திக்குத்து

மயிலாடுதுறை புறநகர் பகுதி கூட்டுறவு நகர் அருகில் மதுரா நகர் 2 வது தெருவில் வசிக்கும் பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற அதிகாரி சேது மாதவன் வசித்துவருகின்றார். இவரின் மனைவி பெயர் நிர்மலாதேவி (62) இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் பிரேம் என்ற இளைஞர் அரசு ( குரூப்) தேர்வுக்கு வீட்டிலிருந்து படித்து வருகின்றார். இவர்களுக்குள் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் நடைபெறுவதுண்டு. சம்பவ தினமான இன்று இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த இளைஞர் பிரேம் வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியைக்கொண்டு நிர்மலாதேவியை சராமரியாக குத்தினார். இதில் அவருக்கு 15 இடங்களுக்கு மேல் கத்திக்குத்து விழுந்தது. தடுக்க வந்த கணவர் சேதுராமனுக்கும் கத்திகுத்தி விழுந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரை பிரேம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். மக்கள் கற்கள் மற்றும் கட்டைக்கொண்டு அடித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பிரேமை கைது செய்தது. நிர்மலா தேவி மற்றும் சேதுராமன் மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். அதில் நிர்மலாதேவி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி அனுப்பி வைக்கட்டார். அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. காவல்துறை இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.