சீர்காழியிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!

சீர்காழி தொகுதியிலும் மதிமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தக் கூட்டணியில் மதிமுகவிற்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மொடக்குறிச்சியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் இராஜேந்திரன் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது.