மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் அருள்மொழி அவர்கள், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி உள்ளனர்.

Play Video