ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. திருவண்ணாமலையில் கோவில் பின்புறம் நேற்று திடீர் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது 3 வீடுகள் மண்ணில் புதைந்தது. மண்சரிவின்போது வீட்டிற்குள் இருந்த 7 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. அந்த பகுதியில் மீட்பு குழுவினர் திவிரமாக பணி செய்து வருகின்றனா்.எனினும் 18 மணி நேரங்கள் ஆகியும் மண்சரிவில் சிக்கியவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவில் பின்புறம் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகே இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. நிலச்சரிவால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
Top News
-
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும்: பயணிகள் தீவிர கோரிக்கை!
-
மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை!
-
மயிலாடுதுறை அரசு விழாவில் தவெக நிர்வாகிக்கு முக்கியத்துவம்? அரசியல் வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு!
-
மயிலாடுதுறை மாவட்ட பௌத்த மதத்தினருக்கு நற்செய்தி: நாக்பூர் புனித பயணத்திற்கு அரசு மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!


