அடுத்த 2 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் பேரில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் தாக்கமாக, ஏப்ரல் 7 அல்லது 8ஆம் தேதி தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ஏப்ரல் 7 முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை காணப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வானிலை மாறுபாடு தொடரும் நிலையில் சில பகுதிகளில் சீரான மழை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.