மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவூர் கீர்த்திவாசர் வீரடேஸ்வரர் கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு ட்ரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே வழுவூரில் இந்து சமய அறநிலையாயத்துறைக்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தளங்களில் ஒன்றான ஆறாவது தலமாக இளங்கிலை நாயகி உடனரை கீர்த்திவாசன் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 2001ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று வெகு விமர்சையாக கும்பிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் சிவபெருமான் கஜசம்கார மூர்த்தியாக விளங்குகிறார், சருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக அபிராச வேள்வி நடத்தி அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட சிவபெருமான் அந்த யானையை அழித்து அதன் தோலை போர்த்திக் கொண்டதாக கோவில் தல வரலாறுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் உட்பிரகாரத்தில் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒன்றாம் தேதி புனித நீர் வைத்து யாக சாலையில் முதல் கால யாகசாலை தொடங்கியது அதனை தொடர்ந்து கும்பாஷ தினமான நான்காம் தேதி ஆறாம் கால யாகசாலை நிறைவுற்று மகா பூரண குதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலங்கள்
சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து வேத வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அருந்தது அங்கு வேத விற்பனர்கள் வேந்தங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாசகம்
பெரு விமர்சனம் நடைபெற்றது அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கோபுர கலசங்கள் மீதும் பக்தர்கள் மீதும் மலர் தூவப்பட்டது ட்ரோன் மூலமும் புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் பூத்து பார்த்த பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர் மேலும் வந்து கும்பாபிஷேகத்தில் தர்மபுர ஆதின மடாதிபதி இந்து சமயத்து அரங்க அதிகாரிகள் உள்ளிட்ட சாமி தரிசனம் செய்தனர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மயலாதுறை
காவல்துறை மாவட்ட காவல்துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டாங்க அத தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.