மயிலாடுதுறையில் சாட்சி மிரட்டல்: தப்ப முயன்ற ரவுடி சுதர்சன் கால் முறிவுடன் கைது!

மயிலாடுதுறையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் கொலை வழக்கில் சாட்சியை மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சன் என்ற ரவுடி, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து கால் எலும்பு முறிவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவிழந்தூர் பல்லவராயன்பேட்டையைச் சேர்ந்த 27 வயது சுதர்சன் மீது பல்வேறு குற்றங்கள் நிலுவையில் உள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சி கொடுக்கும் ராஜ்குமாரை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடிய நிலையில், தப்பிச் செல்ல முயன்ற சுதர்சன் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின்பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சுதர்சன், தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.