அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாடுதுறை

இறைவன்:கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்                            
இறைவி:ஒப்பிலாமுலையம்மை  
தீர்த்தம்:கோமுக்தி தீர்த்தம்  
பாடியோர்:சுந்தரர், சம்பந்தர், அப்பர்      

 

 

தேவாரம்:   

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே "

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 15.கி.மீ.  தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன. 

 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 9.00

 

கோயிலின் முகவரி:

அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாடுதுறை,  குத்தாலம் வழி,  மயிலாடுதுறை மாவட்டம் 609803.

 

தொலைபேசி:

04364 – 232055