சீர்காழி நகரில் கைவிடப்பட்ட தேசியநெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள பழுதுபட்ட சிறுபாலம் சீரமைத்து கட்டும்பணி இன்று முதல் தொடங்கி 2வார காலத்திற்கு நடைபெற உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொள்ளிடம் முக்கூட்டு நோக்கி செல்லும் வாகனங்கள் அரசு மருத்துவமனை வழியாக செல்ல அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்