NIT Trichy Technical Recruitment 2026: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology – NIT Trichy) காலியாக உள்ள தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Group B மற்றும் Group C பிரிவின் கீழ் Technical Assistant, Junior Engineer, Library and Information Assistant, Technician மற்றும் Senior Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு + ITI, டிப்ளமோ (Diploma), பி.இ/பி.டெக் (B.E/B.Tech), MCA அல்லது இளங்கலை/முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NIT Trichy Technical Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி National Institute of Technology, Trichy |
| காலியிடங்கள் | 08 |
| பணிகள் | Technical Assistant, Junior Engineer, Library and Information Assistant, Technician |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 25.03.2026 |
| பணியிடம் | திருச்சி |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nitt.edu/home/other/jobs/ |
NIT Trichy Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
| பதவி (Post Name) | காலியிடங்கள் |
| Technical Assistant | 05 |
| Junior Engineer | 03 |
| Library and Information Assistant | 01 |
| Technician | 09 |
| Senior Technician | 03 |
NIT Trichy Technical Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவி (Post Name) | கல்வித் தகுதி (Educational Qualification) |
| Technical Assistant | First Class B.E / B.Tech / MCA / Diploma (Engg) / Bachelor Degree (Science) / Master Degree (Science) |
| Junior Engineer | First Class B.E / B.Tech / Diploma in Civil / Electrical Engineering |
| Library and Information Assistant | Bachelor’s Degree (Science/Arts/Commerce) மற்றும் B.Lib.I.Sc (Library Science) |
| Technician | 10+2 (Science 60%) அல்லது 10th + 2-year ITI அல்லது Diploma in Engineering |
| Senior Technician | 10+2 (Science 60%) அல்லது 10th + 2-year ITI அல்லது Diploma in Engineering |
NIT Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
ஒவ்வொரு பதவிக்குமான அதிகபட்ச வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
| பதவி (Post Name) | அதிகபட்ச வயது வரம்பு |
| Technical Assistant | 30 வரை |
| Junior Engineer | 30 வரை |
| Library and Information Assistant | 30 வரை |
| Technician | 27 வரை |
| Senior Technician | 33 வரை |
வயது தளர்வு (Age Relaxation):
அரசு விதிகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வுகள்:
- SC / ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (General/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
NIT Trichy Technical Recruitment 2026 சம்பள விவரங்கள்
NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய விவரங்கள் (Salary Details) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவி (Post Name) | சம்பளம் (மாதம்) |
| Technical Assistant | ரூ.35,400 – ரூ.1,12,400 |
| Junior Engineer | ரூ.35,400 – ரூ.1,12,400 |
| Library and Information Assistant | ரூ.35,400 – ரூ.1,12,400 |
| Technician | ரூ.21,700 – ரூ.69,100 |
| Senior Technician | ரூ.25,500 – ரூ.81,100 |
NIT Trichy Technical Recruitment 2026 தேர்வு செயல்முறை
NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 விண்ணப்பதாரர்கள் பின்வரும் மூன்று நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Screening Test: முதற்கட்டத் தகுதித் தேர்வு.
- Skill Test / Main Written Test: திறன் தேர்வு அல்லது முதன்மை எழுத்துத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள் / SC / ST / Ex-Servicemen: Rs.500
- இதர பிரிவினர் (General / OBC / EWS): Rs1,000
- மாற்றுத்திறனாளிகள் (PWD): கட்டணம் இல்லை
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள் 25.02.2026
- விண்ணப்பம் முடியம் நாள் 25.03.2026
NIT Trichy Technical Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் இதர ஆவணங்களுடன் 25.02.2026 முதல் 25.03.2026 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள நபர்கள் www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கைப் பயன்படுத்தி தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Note: முதலில் Signup பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
| Group B அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| Group C அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Gere |





