நாடாளுமன்ற தேர்தலையொட்டி  நாளை (வெள்ளிக்கிழமை) பாதுகாப்பு நடவடிக்கையாக  தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி (நேற்று)முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோல வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட இருக்கிறது.

அந்தவகையில்  தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி நேற்றுமுன்தினம் மட்டுமே ரூ.289.29 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

டாஸ்மாக் விற்பனை ஏப்ரல் 16-ந்தேதி சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடி விற்பனை ஆனது. திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.57.30 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.55.87 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.49.10 கோடி  என ஒரே நாளில் ரூ.289.29 கோடிக்கு விற்பனை ஆனது. தமிழகத்தில் வழக்கமான நாட்களை காட்டிலும், ஏப்ரல் 16-ந்தேதி நடைபெற்ற விற்பனை 2 மடங்கு அதிகமாகும்” என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர்.