பாராளுமன்ற தேர்தல் நாளை (19.04.2024) நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்றது. அப்பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ பி மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கும்பகோணம் வருவாய் கோட்டாச்சியர் பூர்ணிமா உடன் இருந்தார்.