தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவ மாணவிகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

மேலும் தேர்வு எழுதிய மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதேபோல் நூலகங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.