சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் தென்னிந்தியாவுக்கான  ரஷிய துணை தூதர் ஒலெக் நிகோலாயெவிச் அவ்தீவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  மே 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மே 17-ந்தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.