அரியலூர் சின்னகடை வீதியில் உள்ள நகை அடகு கடையில் 3ம் தேதி முதல் பணியாளர் ஆசாத் லோடா காணாமல் போனுள்ளார். கடையின் உரிமையாளர் ராஜஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், கடையின் பொறுப்பு ஆசாத் லோடாவிடம் இருந்தது. அவர் மாயமான பிறகு, கடையிலிருந்த 250 சவரன் தங்கம், 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகை ஆதாரங்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.