ஃபெஞ்சல் புயல்: திணறும் திருவண்ணாமலை: தீபமலையில் மீண்டும் மண்சரிவு!

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. திருவண்ணாமலையில் கோவில் பின்புறம் நேற்று திடீர் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது 3 வீடுகள் மண்ணில் புதைந்தது. மண்சரிவின்போது வீட்டிற்குள் இருந்த 7 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. அந்த பகுதியில் மீட்பு குழுவினர் திவிரமாக பணி செய்து வருகின்றனா்.எனினும் 18 மணி நேரங்கள் ஆகியும் மண்சரிவில் சிக்கியவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவில் பின்புறம் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகே இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. நிலச்சரிவால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.