இறைவன்: உத்வாகநாதர்
இறைவி: கோகிலாம்பாள்
தீர்த்தம்: சப்தசாகரம்
பாடியோர்: சுந்தரர், சம்பந்தர்
தேவாரம்:
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10.கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலத்திலிருந்து 4.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. குத்தாலத்திலிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 1.30 மற்றும் மாலை 3.30 – 8.30
கோயிலின் முகவரி:
அருள்மிகு உத்வாகநாதர் திருக்கோயில், திருமணஞ்சேரி, குத்தாலம் வழி, மயிலாடுதுறை மாவட்டம் 609801.
தொலைபேசி:
ராஜு குருக்கள்: 04364 – 230661, 235002