மேஷம்
பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைக்கு உட்படுவீர்கள். ஊழியர்கள் இதே நிலையிலேயே தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி தொழிலில் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
ரிஷபம்
தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். மனையிடம் வாங்குவதும் புதிய வீட்டுக்கு குடி போவதற்குமான ஏற்பாட்டில் இறங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்று வீட்டில் சந்தோஷத்தை கொண்டு வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
மிதுனம்
ஏற்றமான இருந்த வியாபாரத்தில் சின்ன இடையூறால் பாதிப்படைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி உடல் அசதியால் அவதிப்படுவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை பெறுவீர்கள். உங்களால் உதவி பெற்றவர்கள் தக்க சமயத்தில் திருப்பித் தருவார்கள். புதிய முயற்சிகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3
கடகம்
பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேர்வதால் உற்சாகத்தில் திளைப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு பூமி போன்றவற்றில் செய்த முதலீடு பல மடங்காகப் பெருகியதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5
சிம்மம்
பொல்லாங்கு பேசுபவர்களால் மன நிம்மதி இழப்பீர்கள். தொழில்துறைகளை நிதானமாக நடத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் நிதானத்துடன் செயல்பட தவறாதீர்கள். ஒப்பந்தக்காரர்களுக்கு வரவேண்டிய பணம் தள்ளிப் போவதால் சிரமப்படுவீர்கள். நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6
கன்னி
கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை கஷ்டப்பட்டு நீக்குவீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். பங்குச் சந்தையில் அதிக பணம் போடாதீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகியிருங்கள். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபார ரீதியான அலைச்சலால் சிரமப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
துலாம்
மற்றவர்களுக்காக நீங்கள் செய்கின்ற வேலைகளை தடங்கல் இல்லாமல் முடிப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். இதுவரை தொழிலில் சிக்கலை ஏற்படுத்திய நெருக்கடிகளை விலக்குவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
விருச்சிகம்
கடினமான சிக்கல்களை கடந்து செல்வீர்கள். இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகியதால் நிம்மதி அடைவீர்கள். மார்க்கெட்டிங் சேல்ஸ்மேன் என்ற அலைச்சல் மிகுந்த தொழிலில் மாற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைப்பதால் அதை விரிவுபடுத்த எண்ணம் கொள்வீர்கள். தனியார்துறை ஊழியர்கள் வருமானத்தைப் பெருக்கி சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
தனுசு
உங்கள் புத்திசாலித்தனத்தால் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுவீர்கள். தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவுகளை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1
மகரம்
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட தவறாதீர்கள். வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்தால் அமைதியை அனுபவிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தவறி நடக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
கும்பம்
தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு வந்து மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். இல்லத்தரசிகள் தெய்வ வழிபாட்டால் கணவர்களுக்கு இருந்த உடல் பாதிப்பு அகல பாடுபடுவார்கள். அரசுப் பணியாளர்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பயணங்களில் கவனத்தை சிதற விடாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
மீனம்
வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அகற்றுவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள். ஒர்க் ஷாப், எலக்ட்ரீசியன், கொத்தனார்கள் தொடர்ந்து வேலை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை அடைவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5