மயிலாடுதுறை நகராட்சிகுட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3.53 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பறைகள்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிகுட்பட்ட டபீர் தெருவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 15 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி அவர்கள். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா அவர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் அவர்கள் உள்ளனர்.