தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.3.2025) செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திருக்கழுக்குன்றத்திலிருந்து நீண்ட தூரம் நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் உரையாடி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் பொதுமக்கள் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 280 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 497 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 508 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், நகர்ப்புறப் பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நெடுங்காலமாக வீடு கட்டி குடியிருக்கும் 214 நபர்களுக்கு நிலங்களை வரன்முறைப்படுத்தி பட்டாக்கள் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் – ஆப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தாளிமங்களம் கிராமத்தில் 6 கோடி ரூபாய் செலவில் மலக்கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் – ஊனமாஞ்சேரி ஊராட்சியில் 16 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம். காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேல்கல்வாய், சிறுகுன்றம். ஒரகடம், வழுவதூர், ஆனூர், நெம்மேலி, புல்லேரி, மேலரிப்பாக்கம், இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் நெடுமரம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்சேரி ஊராட்சி, சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சோத்துப்பாக்கம், பொறையூர். 23.கொளத்தூர், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி நாராயணபுரம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் தொழுப்பேடு ஆகிய ஊராட்சிகளில் 2 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் லட்டூர் ஊராட்சியில் 19 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், நென்மேலி ஊராட்சிக்குட்பட்ட துஞ்சம் கிராமத்தில் 9 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் தானிய கிடங்கு, மேலேரிப்பாக்கம் ஊராட்சியில் 9 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் பணிகூடக் கட்டடம், விளாகம் ஊராட்சியில் 19 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் பால் கொள்முதல் நிலையக் கட்டடம், இலத்தூர் ஊராட்சி ஒன்றியம். பவுஞ்சூர் கிராமத்தில் 57 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பொது சுகாதார நிலையக் கட்டடம், கூவத்தூர் ஊராட்சியில் 39 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கிராம ஊராட்சி செயலகக் கட்டடம், வீரபோகம் ஊராட்சிக்குட்பட்ட பாக்கூர் கிராமத்தில் 9 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் நியாயவிலை கடை;
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் புலிப்பாக்கம் மற்றும் கொண்டமங்களம் ஆகிய ஊராட்சிகளில் தலா 39 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவிலும், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் 39 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவிலும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்-எல். எண்டத்தூர் ஊராட்சியில் 39 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள்:
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் கருணாகரச்சேரி ஊராட்சியில் 30 இலட்சம் ரூபாய் செலவிலும், அவுரிமேடு ஊராட்சியில் 30 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மொரப்பாக்கம் ஊராட்சியில் 35 இலட்சம் ரூபாய் செலவிலும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் – சிறுபேர்பாண்டி ஊராட்சியில் 35 இலட்சம் ரூபாய் செலவிலும்
கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் தொழுப்பேடு மற்றும் கொங்கரை மாம்பட்டு ஆகிய இடங்களில் 44 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடங்கள்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், திருக்கழுக்குன்றம் சட்ராஸ், திருப்போரூர் கேளம்பாக்கம், இலத்தூர் பவுஞ்சூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார சுகாதார அலகுக் கட்டடங்கள், 6 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி, அச்சரப்பாக்கம் மொறப்பாக்கம், சிறுபேர்பாண்டி, மதுராந்தகம் – உழுதமங்கலம் ஆகிய இடங்களில் 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள்;
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கீரப்பாக்கத்தில் 212 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் தரைத்தளத்துடன் கூடிய 5 அடுக்குமாடிக் கட்டடம்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், சிட்லப்பாக்கம் ஊராட்சியில் 86 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கால்நடை மருத்துவமனை கட்டடம்:
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 1 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகக் கட்டடம்:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில்,
செங்கல்பட்டில் 27 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் 15 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் அரசு பாதுகாப்பு இல்லம்;
என மொத்தம், 280 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்றப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்,
செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிப் பகுதியில் 488 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், செங்கல்பட்டு நகராட்சியில் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தினசரி காய்கறி அங்காடி
கட்டடம் கட்டும் பணி, செங்கல்பட்டு நகராட்சியில் 3 கோடியே 58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகக் கட்டடம் கட்டும் பணி:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு 1 கோடியே 87 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி:
என மொத்தம், 497 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 13,966
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள். 628 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான வீடு வழங்குதல், 287 63 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்குதல்; மகளிர் திட்டம் சார்பில் 25,356 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு, மகளிர் தொழில் முனைவோர் தனிநபர் கடன், கோழி மற்றும் ஆடு வளர்ப்பு. மீன்வள மதிப்புக்கூட்டு குழு. ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு, காய்கறி பண்ணை தொகுப்பு. கிராமப்புற தொழில்முனைவோர் திட்டம், முதியோர் சுய உதவிக்குழு, அமுத சுரபி நிதி, சுழல் நிதி போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2,600 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற திட்டங்களில் உதவிகள், தோட்டக்கலைத் துறை சார்பில் 744 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், நடமாடும் காய்கறி விற்பனை வண்டி, தமிழ்நாடு பாசன மேலாண்மை திட்டம்,
மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 523 பயனாளிகளுக்கு, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன காதொலி கருவி, நவீன செயற்கை அவயம், எல்போ ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், சிறப்பு சக்கர நாற்காலி, திறன்பேசி, மடக்கு குச்சி, கருப்புக்கண்ணாடி, வங்கி கடன் மானியம், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 509 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் திட்டங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் வைப்பீடு. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் ஆகிய திட்டங்களில் உதவிகள்:
கூட்டுறவுத் துறை சார்பில் 942 பயனாளிகளுக்கு கலைஞர் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைஞர் கடன் திட்டம், கல்வி கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், பயிர்க்கடன், சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் போன்ற திட்டங்களில் உதவிகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு, திருமண நிதியுதவி, இயற்கை மரண உதவித் தொகை, கல்வி நிதியுதவி, ஓய்வூதியம், பணியிடத்தில் விபத்து மரணம் நிவாரண உதவி;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 1050 பயனாளிகளுக்கு, மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தில் உரம் மற்றும் விதை கொள்முதல் மானியத் தொகை, கணவனை இழந்த கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற கிராமப்புற பெண்களுக்கு கோழிக்குஞ்சுகள் மானிய விலையில் வழங்குதல், தாது உப்புக் கலவை வழங்குதல், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தித் திட்டத்தில் பழந்தோட்டம் மற்றும் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக தீவன சாகுபடி போன்ற திட்டங்களில் உதவிகள்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 228 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடு தேடி மருந்து வழங்குதல், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குதல்;
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 1577 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல்;
என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 508 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தல்
சென்னையை சுற்றியிருக்கக்கூடிய நான்கு மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நெடுங்காலமாக வீடு கட்டி குடியிருப்பவர்கள், பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதை அறிந்து 10.2.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கி ஆறு மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 214 நபர்களின் நிலத்தை வரன்முறைப்படுத்தி அவர்களுக்கு பட்டாக்களை வழங்கி நகர்ப்புறப் பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். இராமச்சந்திரன், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ். பாலாஜி, எம். பாபு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். அருண்ராஜ், இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.