மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் காவல்துறையில் பெரிய அளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்முறைத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றி வந்த ஜி. ஸ்டாலின் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புக்யா சினேகா பிரியா, IPS மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், நிர்வாக ரீதியிலான மாற்றங்களுக்காகவும் 50-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய எஸ்பி-யாக பொறுப்பேற்கவுள்ள புக்யா சினேகா பிரியா, விரைவில் தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


