🏏✨ சாய் சுதர்சனைக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் பாராட்டு!

ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இதில், இளம் துடுப்பாளரான சாய் சுதர்சனை, முக்கிய பங்காற்றினார்.

பின்னர் 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சாய் சுதர்சனின் தாக்கத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், சமூக ஊடகத்தில் அவரை பாராட்டியுள்ளார்:“நேர்த்தியான ஆட்டம் சாய்! உன் வெற்றியினால் பெருமைப்படுகிறோம்!” எனக் கூறியுள்ளார்.

🟠 இதனால், 8 இன்னிங்ஸ்களில் 5 அரை சதங்கள் எனும் சாதனை அவருக்குச் சேர்ந்தது.
🏏 மொத்தமாக 417 ரன்கள் எடுத்துள்ள அவர், தற்போதைய ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பி (Orange Cap) பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய் சுதர்சனை பாராட்டி, தனது  பக்கத்தில் பதிவு செய்துள்ளார்:🎙️ “நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்திய ஜெர்சியில் உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்.”