பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
Top News
-
சீர்காழி சாலையில் போலீசாரை கண்டு பயந்த வாகன ஓட்டிகள்: அபராதத்திற்கு பதிலாக காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
-
மயிலாடுதுறை: பூம்புகார் கல்லூரி வளாகத்தில் கஞ்சா புகை, உடைந்த மது பாட்டில்கள்! அச்சத்தில் மாணவர்கள்
-
மயிலாடுதுறையில் சிறப்பு விழா: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நற்றுணை விருது’ வழங்கி கௌரவம்!
-
மயிலாடுதுறை: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலிருந்து விமரிசையாக புறப்பட்ட 500 பால்குட ஊர்வலம்!
-
மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாழாகும் அபாயத்தால் விவசாயிகள் வேதனை!


