அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

இறைவன்:வேதபுரீஸ்வரர்                             
இறைவி:சௌந்தராம்பிகை 
தீர்த்தம்:வேத தீர்த்தம் 
பாடியோர்:சம்பந்தர்      
கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 38 வது ஆலயம். அகத்தியர் இறைவனை வழிபடும்போது அதை அறியாத மன்னன் வானவெளியில் பறந்த தேர் அழுந்தியாதல் தேரழுந்தூர் என் பெயர் பெற்றது. தேரழுந்தூர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். தமிழ்ச் சான்றோர் இரும்பிடர்த்தலையார் வாழ்ந்த தலம். பெருமாளும் சிவனும் சொக்கட்டான் ஆடிய மேற்கு நோக்கிய தேவார திருத்தலம் .வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள், முனிவர்கள் இவர்கள் பூசித்துப் பேறு எய்தினர்.

தேவாரம்:   

கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடமே வினையே

 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து கோமல் செல்லும் வழியில் 12.கி.மீ.  தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்,  குத்தாலம் வழி,  மயிலாடுதுறை மாவட்டம் 609808.

தொலைபேசி:

04364 – 237650