நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அதிகாரபூர்வமாக விஜய் அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று கட்சி சார்பில் தெரிவித்துள்ளனர்.

சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 18-ம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.