பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிற ஆலோசனை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது; “இந்த கூட்டணி நிபந்தனையில் உருவானது அல்ல. அர்ப்பணிப்பில் உருவானது. மோடி மீண்டும் பிரதமராவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம். பாஜக நாடாளுமன்ற குழு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடியை முன்மொழிகிறேன். தேசத்துக்காக மோடி தன்னை அர்ப்பணித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலகில் மூன்றாவது முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. 1962க்கு பிறகு 3வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ளது.” என்று பேசியுள்ளார்.