நாடாளுமன்ற தேர்தல் நாளை (19.04.2024) தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும்  வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்  வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது மற்றும் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை வாக்களிக்க வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெப்ப அலை காரணமாக அசெளகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.