இறைவன்: | கல்யாணசுந்தரேஸ்வரர் |
இறைவி: | பரிமளசுகந்தநாயகி அம்மன் |
தீர்த்தம்: | சுந்தர தீர்த்தம், காவிரி |
பாடியோர்: | அப்பர், சம்பந்தர் |
தேவாரம்:
மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்திஎங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து மாப்படுகை வழியாக குத்தாலம் செல்லும் வழியில் 8.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி, குத்தாலம் வழி, மயிலாடுதுறை மாவட்டம் 609301.
தொலைபேசி:
ஆர். வைத்தியநாதகுருக்கள்: 04364 -235462, 235225, 9942239089