விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது வாய்க்கால் நடுவிலிருந்த பாறையை அகற்றும் பொருட்டு (23.3.2025) மாலை அப்பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முத்துலட்சமி என்பவரின் மகள் காயத்திரி (வயது 10) என்பவரின் தலையின் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த சிறுமி காயத்திரியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Top News
-
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும்: பயணிகள் தீவிர கோரிக்கை!
-
மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை!
-
மயிலாடுதுறை அரசு விழாவில் தவெக நிர்வாகிக்கு முக்கியத்துவம்? அரசியல் வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு!
-
மயிலாடுதுறை மாவட்ட பௌத்த மதத்தினருக்கு நற்செய்தி: நாக்பூர் புனித பயணத்திற்கு அரசு மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!


