மயிலாடுதுறை கிடாரங்கொண்டான் கிராமத்தில் காரீப்பருவம் 2024-2025 நெல் கொள்முதல் துவக்க விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கிடாரங்கொண்டான் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காரீப்பருவம் 2024-2025 சம்பா பருவத்திற்கான நெல் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மோகன் அவர்கள், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் அவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.