மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்கள்.உடன் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அல்மாஸ் பேகம் உள்ளனர்.