மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பாண்டகசாலை நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது

மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பாண்டகசாலை நியாய விலைக் கடையில் கூட்டுறவு துறை சார்பில் 1கிலோ பச்சரிசி,1கிலோ சீனி மற்றும் முழு நீளக் கரும்பு ஆகியவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆப் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஷ்வரி அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள் விநாயக அமுல்ராஜ் அவர்கள், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் அவர்கள், முதுநிலை மண்டல மேலாளர் மோகன் அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் சுதா முரளி உள்ளனர்.