முக்கிய அறிவிப்பு!! அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்தது. டெல்டா மாவட்டங்களில் நேற்று மதியம் முதல் லேசான மழை பெய்து வந்தது. மாலைக்கு பின்னர் மழை சற்று வேகம்பிடித்து. இரவில் மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.