மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் இடம் பிடிப்பதற்காக 2 1/2வயது குழந்தையை அமர வைத்த பெற்றோர்.

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றது நீதூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் உள்ள ஒரு இருக்கையில் 2 1/2 வயது பெண் குழந்தை மட்டும் தனியாக அமர வைத்துள்ளனர்.

அதனை தவிர மற்ற இருக்கைகள் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர். அந்த பேருந்திற்காக ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட பயணிகள் யாருடைய குழந்தை என தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

உடனடியாக பேருந்து நடத்தினரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர் அதனால் அவர் உடனடியாக டிரைவரிடம் தெரிவித்து பேருந்தை பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினார் அந்த பேருந்தை பழைய பேருந்து நிலையத்தில் அரை மணி நேரம் நிறுத்தி வைத்திருந்தனர். கல்லூரி மாணவிகள் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் பார்த்துக் கொள்வதற்காக சாக்லேட் கொடுத்து அதனை சமாதானம் செய்து வந்தனர்.

பணிமனை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர் மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்து இருந்த பஸ்ஸை காணவில்லை என பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்தடைந்தனர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்துவிட்டு தனது கர்ப்பிணி மனைவி அழைத்து வருவதற்காக பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.

அதற்குள் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரிய வந்தது. பேருந்தின் பாதையை பின்தொடர்ந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை சென்று விட்டு மீண்டும் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது