மயிலாடுதுறையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் நாளை மறுநாள் 20-த் தேதி (வெள்ளிக்கிழமை)  தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நாளை மறுநாள் 20-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை குறு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25- க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலிபணியிடங்களுக்காக 500-க்கு மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வழிகாட்டுதல்

இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பி.இ. உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை,பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்க ளுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இணையதளத்தில் பதிவு

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை அளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளுர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே தனியார்துறை நிறுவனங்களில் வேலைதேடும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு 04364- 299790. என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Play Video