சென்னை, நங்கநல்லூரில் ரூ.65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களை  (6.3.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமத் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்கள் பாத்திமா அகமது,  எம். தாவூத் பீ,  மௌலானா குலாம் முகமது மெஹ்தி கான், ஏ. முகம்மது அஷ்ரப்,  ஏ. அப்சல்,  குணங்குடி ஆர்.எம். அனிஃபா, மற்றும் மாவட்ட காஜிகள் ஜனாப். சலாவூதின் முகம்மது அயூப், ஜனாப். எம். சையது மசூது, ஜனாப் முகம்மது அப்துல் காதர், ஜனாப். பசூலுல் ஹக், ஜனாப். அப்துல் காதிர், ஜனாப் கே. அப்துல் கரீம், ஜனாப். கே.எம்.முகம்மது அஸ்ரப் அலி, ஜனாப். அக்பர் அலி ஆகியோர் சந்தித்து, நாகப்பட்டினத்தில் 3.3.2025 அன்று நடைபெற்ற அரசு விழாவில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து சான்றிழ்கள் பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்து நன்றி

பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2023-ஆம் ஆண்டு முதல், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ், தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் (Empowered Committee) ஒப்புதல் பெற்று, வழங்கப்பட்டு வருகிறது. இக்குழுவால் 159 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டுள்ளது. அதில் 103 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து சான்றிழ்கள் பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் – டாக்டர். அசார் ஷரிப் (மீயாசி கல்லூரி), ஹாஜி டாக்டர் ஏ.கே. காஜா நஜிமுதீன் (ஜமால் முகமது மியாசி கல்லூரி), தவ்ஃபிக் அகமது (அன்னை கதிஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி), டாக்டர் சலீம் (ஆலிம் முகமது சாலிஹ் பொறியியல் கல்லூரி), ஹபிஸ் வாவு சார் அகமது இஸ்ஹாக் அஜாரி, (வாவு வஜீஹா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி), டாக்டர். அ. யஹ்யா நயீம், (அன்னை கல்வி குழுமம்),  அஜ்மல் கான் ஹவுத், (ஐஎல்எம் பப்ளிக் பள்ளி) ஆகியோர்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவஹிருல்லா, தலைமைச் செயலாளர்  நா. முருகானந்தம், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் முனைவர் சா.விஜயராஜ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர்  மு.அ.சித்திக், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சிறப்புச் செயலாளர்  வ.கலையரசி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.