யூடர்ன் அடித்த புயல், சென்னையில் ரியல் ஆட்டம் ஆரம்பம்

mayilai guru

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்பட பல இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்படுவதிலும் எந்த மாற்றங்களும் இல்லை. மேலும் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்க்ஃளுடன் தொடர்பு கொண்டு பயணத் திட்டத்தை உறுதி செய்த பின்னர் விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.