மயிலாடுதுறையில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஆறாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரிஷி குமார் ஏற்பாட்டில் நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகமயிலாடுதுறைசட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கலந்துகொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை தோல் சிகிச்சை. காசநோய், சித்த வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் யோகா யுனானி . போன்ற மருத்துவ சிகிச்சை நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டு முகாமினை பயன்படுத்திக்கொண்டனர். இதில் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் எஸ் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட சுகாதார அலுவலர் அஜித் பிரபு குமார்,வட்டார மருத்துவர் கிங்டன் ஜூடு.வட்டார மருத்துவ அலுவலர் கோபி, நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கல்யாணி ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.