LeoPard MayiladuthuraiLeoPard Mayiladuthurai

சிறுத்தையை பிடிக்கும்பணி இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தை பதுங்கியுள்ள பகுதியில் தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. . இந்நிலையில், மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்யும் தெளிவான படத்தை வெளியிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த 3ஆம் தேதி இரவு இந்தப் புகைப்படம் எடுக்கப்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment